புதிதாக ஆளுக்கொரு 60 தின ஈரான் யுத்த நிறுத்த கதை

புதிதாக ஆளுக்கொரு 60 தின ஈரான் யுத்த நிறுத்த கதை

அமெரிக்க சனாதிபதி தனது 80ம் பிறந்த தின நாளில், நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஈரானுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை கையொப்பமிட அறிவித்திருந்தார். ஆனால் ஈரான் அதற்கு அவசரப்படவில்லை.

இன்று திங்கள் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் தான் இலத்திரனியல் கையொப்பம் இட்டுள்ளதாக ரம்ப் கூறியுள்ளார். ஆனால் ஈரான் கையொப்பம் இடவில்லை. ஒரு தரப்பு மட்டும் கையொப்பம் இட்டால் அது ஒப்பந்தம் ஆகுமா?

ஈரான் தாம் வெள்ளிக்கிழமையே ஜெனீவாவில் வைத்து கையொப்பம் இட உள்ளதாக கூறியுள்ளது.

லெபனானும் இந்த யுத்த நிறுத்தத்தில் அடங்கும் என்கிறது ஈரான். ஆனால் அமெரிக்கா லெபனான் தொடர்பாக எதையும் தெளிவாக கூறவில்லை. இஸ்ரேலும் இந்த யுத்த  தொடர்பாக கருத்து எதையும் இதுவரை கூறவில்லை.

யுத்த நிறுத்த உள்ளடக்கம் இதுவரை பகிரங்கம் செய்யப்படவில்லை.