புதிய பாராளுமன்றை மோதி திறப்பு, எதிரணி புறக்கணிப்பு

புதிய பாராளுமன்றை மோதி திறப்பு, எதிரணி புறக்கணிப்பு

இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தை இந்திய பிரதமர் மோதி வரும் மே 28ம் திகதி திறந்து வைக்கவுள்ளார். ஆனால் இந்த விழாவுக்கு செல்லாது எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிப்பு செய்யவுள்ளன.

இந்த விழாவுக்கு இந்திய சனாதிபதி Droupadi Murmu அழைக்கப்படாமையும், சனாதிபதியால் திறந்து வைக்கப்படாமையையும் தமது புறக்கணிப்புக்கு காரணம் என்கின்றன எதிர்க்கட்சிகள்.

இந்திய சரத்தின் Article 79 இந்திய பாராளுமன்றம் சனாதிபதியையும், Council of States, House of the People ஆகிய அவைகளையும் கொண்டிருக்கும் என்கிறது.

தற்போது 19 எதிர்க்கட்சிகள் இந்த புறக்கணிப்பை அறிவித்து உள்ளன. அவற்றுள் AAP, RJD, DMK (தமிழ்நாடு), கம்யூனிஸ்ட் கட்சி, JDU, NCP (காங்கிரஸ்), Samajwadi ஆகியனவும் அடங்கும்.