அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (Memorandum of Understanding) இருதரப்பும் கையொப்பம் இட்டுள்ளன. உலக நாடுகளின் தலைமைகளும் இந்த 14 விசயங்களை உள்ளடக்கிய இணக்கத்தை வரவேற்று உள்ளன.
ஆனால் இஸ்ரேலும், அதன் ஆதரவாளரும் மேற்படி இணக்கத்தை கடுமையாக கண்டிக்கின்றன.
பிரெஞ்சு சனாதிபதி மக்கிறான் இந்த இணக்கம் “paves the way for lasting peace” என்றுள்ளார். சீன வெளியுறவு அமைச்சர் Wang Yi “dawn of peace has arrived” என்றுள்ளார்.
ஆனால் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோர் இந்த இணக்கத்தை வன்மையாக சாடியுள்ளனர். தாம் இந்த இணக்கத்தை கடைபிடிக்க முடியாது என்றுள்ளனர். Chuck Schumer என்ற அமெரிக்க செனட்டர் இந்த இணக்கம் “one of the biggest American disasters” என்றுள்ளார்.
