யூக்கிறேன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய சனாதிபதி பூட்டின் ஒரு இணக்கத்துக்கு வருவார் என்று தான் வேண்டுவதாகவும், ஆனால் பூட்டின் தீர்வில் நாட்டம் இன்றி உள்ளார் போலும் (It’s possible that he doesn’t want to make a deal) என்று ரம்ப் இன்று செவ்வாய் கூறியுள்ளார்.
அத்துடன் தீர்வு ஏற்படாவிடின் நிலைமை மேலும் உக்கிரம் ஆகும் (rough situation) என்றும் ரம்ப் கூறியுள்ளார்.
யூக்கிறேன் பாதுகாப்புக்கு அமெரிக்க படைகளை அனுப்ப மாட்டேன் என்றும் ரம்ப் கூறியுள்ளார்.
2022ம் ஆண்டு யூக்கிறேன் மீது ரஷ்யா தொடுத்த யுத்தத்துக்கு இரு தரப்பிலும் இதுவரை சுமார் 1 மில்லியன் பேர் பலியாகி அல்லது காயமடைந்து உள்ளனர் என்று கூறப்படுகிறது.