பூமிக்கு அருகால் செல்லவுள்ள பஸ் அளவு விண்கல்

பூமிக்கு அருகால் செல்லவுள்ள பஸ் அளவு விண்கல்

GMT நேரப்படி இன்று ஜனவரி 26ம் திகதி நள்ளிரவின் பின் பஸ் அளவிலான விண்கல் ஒன்று பூமிக்கு அண்மையால் செல்லவுள்ளது. 2023 BU என்று பெயரிடப்பட்ட இந்த விண்கல்லால் பூமிக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விண்கல் தென் அமெரிக்காவின் தெற்கு முனையில் சுமார் 3,600 km உயரத்தில் செல்லும். இவ்விடத்திலேயே இக்கல் மிக குறைந்த தூரத்தில் பயணிக்கும். இக்கல் பூமிக்கும் சில செய்மதிகளுக்கும் இடையால் செல்லும்.

இங்கே அதிசயம் என்னவென்றால் இந்த கல்லையும் அதன் பாதையையும் விஞ்ஞானிகள் கடந்த கிழமையே அறிந்து இருந்தனர். Crimea பகுதியில் வாழும் Gennadiy Borisov என்பவரே இந்த கல்லை முதலில் அடையாளம் கண்டார்.

இந்த கல் 3.5 மீட்டர் முதல் 8.5 மீட்டர் அளவிலானது என்று கணிக்கப்படுகிறது.

25 மீட்டர் அளவிலான விண்கல் சராசரியாக 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியில் விழலாம்.

140 மீட்டர் அளவிலான விண்கல் சராசரியாக 20,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியில் விழலாம். சுமார் 25,000 இவ்வகை கற்கள் அறியப்பட்டுள்ளன.

1,000 மீட்டர் (1 km) அளவிலான விண்கல் சராசரியாக 500,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியில் விழலாம். சுமார் 900 இவ்வகை கற்கள் அறியப்பட்டுள்ளன. இக்கல் பூமியில் விழுந்தால் சுமார் 10 km கிடங்கை உருவாகும்.

10,000 (10 km) அளவிலான விண்கல் சராசரியாக 100 மில்லியன் முதல் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியில் விழலாம். இதுவரை 4 இவ்வகை கற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை பூமியில் விழுந்தால் சுமார் 100 km அகல கிடங்கை உருவாக்கும்.

தரவு: நாசா