பென்ரகன் இரகசியமாக ஈரான் யுத்த பாதிப்புகளை அதிகரிக்கிறது 

பென்ரகன் இரகசியமாக ஈரான் யுத்த பாதிப்புகளை அதிகரிக்கிறது 

ஈரான் மீது அமெரிக்கா செய்யும் யுத்தம் காரணமாக ஏற்படும் அழிவுகளை, இழப்புகளை ரம்ப் அரசு முடிந்தவரை மறைத்து வந்துள்ளது. அவ்வாறு மறைத்து வைத்த உண்மைகள் சிலவற்றை அமெரிக்க படைகளின் தலைமையகமான பென்ரகன் (Pentagon) தனது இணையத்தில் சனிக்கிழமை இரகசியமாக பதிவு செய்துள்ளது.

பென்டரகனின் Defence Casualty Analysis System (DCAS) ஜூலை 7ம் திகதிக்கு பின்னான ஈரான் மீதான யுத்த இழப்புகளை அதற்கு முன்னான இழப்புகளில் இருந்து பிரித்து “Overseas Operations” என்ற கபடமான தலைப்பின் கீழ் பதிகிறது.

ஜூலை 7ம் திகதிக்கு பின் யுத்தத்தில் மரணித்த அமெரிக்க படைகளின் தொகை முதலில் 3 என்றே கூறப்பட்டது. அத்தொகை தற்போது 4 ஆக அதிகரித்துள்ளது. அதனால் ஈரானுடனான யுத்தத்தில் பலியான அமெரிக்க படைகளின் மொத்த தொகை 18 ஆக உயர்ந்துள்ளது.

பென்ரகன் காயமடைந்த அமெரிக்க படைகளின் தொகையை தெளிவாக அறிவிக்காத நிலையில் கசிந்த செய்திகள் இதுவரை 482 அமெரிக்க படையினர் காயமடைந்ததாக கூறின. ஆனால் அத்தொகை தற்போது 624 ஆக உயர்ந்துள்ளது.

விமான இழப்பு, ஏவுகணை இழப்பு, ஏனைய குண்டு இழப்பு, படை தளங்களுக்கு ஏற்பட்ட இழப்பு போன்றவற்றின் விபரங்கள் தற்போதும் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.