பெரிய நிறுவனங்கள் அடிபணிய, ரம்பை வென்ற சிறிய நிறுவனம் 

பெரிய நிறுவனங்கள் அடிபணிய, ரம்பை வென்ற சிறிய நிறுவனம் 

அமெரிக்க சனாதிபதி ரம்ப் கண்மூடித்தனமாக இறக்குமதி வரிகளை நடைமுறை செய்ய Amazon, Costco போன்ற அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவங்களின் CEOகள் பயந்து நடுங்க, VOS Selection என்ற wine இறக்குமதி செய்யும் சிறிய குடும்ப நிறுவனத்தின் CEO Victor Schwartz ரம்பை நீதிமன்றம் இழுத்து வென்றுள்ளார்.

2025ம் ஆண்டு ஏப்ரல் 14ம் திகதி Liberty Justice Center என்ற தொண்டர் சட்டத்தரணிகள் அமைப்பின் உதவியுடன் தாக்கல் செய்த VOS Selection, Inc. v. Trump என்ற வழக்கே வெள்ளிக்கிழமை ரம்பின் வரிகளை தடை செய்து ரம்புக்கு பெரும் தோல்வியை வழங்கியுள்ளது.

பின்னர் VOS Selection நிறுவனத்துடன் 12 மாநில வழக்குகளும், Learning Resources என்ற நிறுவன வழக்கும் இணைந்தன.

இங்கே நகைப்புக்குரிய விசயம் என்னவென்றால் VOS Selection தாக்கல் செய்த வழக்கு வென்றதால் இதுவரை அறவிடப்பட்ட $134 பில்லியன் வரிப்பணம் திருப்பி வழங்கப்படவுள்ளது. அந்த பணத்துக்கு முண்டியடிக்கிறார்கள் Amazon, Costco போன்ற பெரிய நிறுவன CEOகள்.

ஒரு தடவை Amazon CEO Jeff Bezos தமது விலைகளில் ரம்பின் இறக்குமதி வரியை தனியாக காண்பிக்க அறிவித்தபோது அவ்வாறு செய்வது தனது வரிகளை அமெரிக்க மக்களே செலுத்துகிறார்கள் என்பது தெரிந்துவிடும் என்பதால் ரம்ப் மூர்க்கம் கொள்ள, நடுங்கிய Bezos தன் முயற்சியை கைவிட்டு இருந்தார்.