அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானை பெப்ரவரி மாதம் 28ம் திகதி தாக்க ஆரம்பித்தது முதல் இதுவரை மத்திய கிழக்கு ஊடாக செல்லும் சுமார் 14,000 விமான சேவைகள் (flights) இரத்து செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை டுபாய், அபுதாபி, கட்டார், பஹ்ரைன், சவுதி, குவைத், இஸ்ரேல், ஈரான், ஈராக், ஜோர்டான் ஆகிய 10 விமான நிலையங்களை பயன்படுத்த இருந்தன.
கட்டாரின் Hamad விமான நிலையத்தில் 94% விமான சேவைகளும், UAE யின் டுபாய் விமான நிலையத்தில் 85% சேவைகளும், அபுதாபியில் 89% சேவைகளும், Sharjah விமான நிலையத்தில் 90% சேவைகளும், இஸ்ரேலின் Ben Gurion விமான நிலையத்தில் 90% சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
சில நாடுகள் தமது நாட்டவரை விசேட விமானங்கள் மூலம் மீட்க ஆரம்பித்துள்ளன. சிலர் தரை மூலம் அண்டை நாடுகளை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.
உக்கிரமாக தொடரும் யுத்தம் இரண்டாம் கிழமைக்குள் நுழைவதால் விமான சேவைகள் தற்போதைக்கு வழமைக்கு திரும்பாது. மாற்று வழிகள் பயண நேரத்தையும், விலையையும் அதிகரிக்க வைக்கும்.
தற்போது இடர் இன்றி இயங்கும் தூர இடத்து விமான நிலையங்களில் விரைவில் விமான எரிபொருளுக்கு தட்டுப்பாடு தோன்றி அது நெருக்கடியை மேலும் நீடிக்கலாம்.
