அமெரிக்க சனாதிபதி ரம்ப் தாம் தற்போதும் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொடர்வதாகவும் தான் விரைவில் இந்திய பிரதமர் மோதியை சந்திக்க உள்ளதாகவும் செவ்வாய் கூறியுள்ளார்.
இரண்டு “Great Countries” களும் விரைவில் நல்ல இணக்கத்துக்கு வரும் என்றும் ரம்ப் கூறியுள்ளார்.
திடீரென உதிர்ந்த ரம்பின் அன்பான வார்த்தைகளுக்கு பதிலளித்த பிரதமர் மோதி வாஷிங்ரனும் நியூ டெல்லியும் “close friends and natural partners” என்றுள்ளார்.
கடந்த கிழமை மோதி சீனா சென்று சீன சனாதிபதி சீயை சந்தித்து உரையாடியதால் விசனம் அடைந்த ரம்ப் மோதியை வசைபாடி இருந்தார்.