மலாவியில் காந்தி சிலைக்கு எதிர்ப்பு

Malawi

ஆபிரிக்க நாடான மலாவியில் (Malawi) நிறுவப்படும் காந்தி சிலைக்கு கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது. அந்நாட்டு குழு ஒன்று (Gandhi Must Fall) கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவ்விடத்து நீதிமன்றம் சிலைக்கான கட்டுமான வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.
.
சுமார் $10 மில்லியன் செலவில் மாநாட்டு மண்டபம் உட்பட ஒரு தொகுதி கட்டிடங்களை மலாவியின் Blantyre என்ற நகரில் கட்ட இந்தியா இணங்கி இருந்தது. இவ்விடத்தில் ஒரு காந்தி சிலையையும் நிர்மாணிக்க இந்திய நடவடிக்கைகள் எடுத்திருந்தது.
.
ஆனால் மலாவியின் மக்கள் சிலர் காந்தி சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்றனர். காந்தி ஒரு துவேஷி எனவும், அவர் மலாவிக்கு எந்தவொரு நலனையும் செய்யவில்லை என்றும் அவர்கள் வாதாடி உள்ளனர். காந்தி ஆபிரிக்கர்களை ‘savages’, ‘kaffirs’ என்று அழைத்ததையும் அவர்கள் எடுத்துக்காட்டி உள்ளனர்.
.
இந்த சிலை மற்றும் மண்ட திறப்பு விழாவுக்கு இந்திய உப-ஜனாதிபதி Venkaiyah Naidu மலாவி செல்லவிருந்தார்.
.
கானா (Ghana) என்ற நாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் உள்ள காந்தி சிலைக்கும் எதிர்ப்பு தோன்றியுள்ளது.
.