மலையக விடயம், பிரித்தானியாவின் வினை அதை சுடும்?

மலையக விடயம், பிரித்தானியாவின் வினை அதை சுடும்?

இலங்கை மலையக தமிழரின் உரிமை தொடர்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. Kithusara Group என்ற அமைப்பு மலையக தமிழரின் அவலத்துக்கு இலங்கையையோ அல்லது இந்தியாவையோ குறி வைக்காது பதிலுக்கு பிரித்தானியா மீது குறிவைத்துள்ளது.

உண்மையில் பிரித்தானியாவே இந்திய தமிழரை இலங்கைக்கு அடிமைகளாக இழுத்து வந்தது. பின்னர் அவர்களை நடுவில் கைவிட்டு சென்றது. அதனால் பிரித்தானியாவை குற்றம் சாட்ட மலையக மக்களுக்கு உரிமை உண்டு. இந்த வழக்கை பிரித்தானிய நீதிமன்றில் தாக்கல் செய்தலும் சாத்தியம்.

பிரித்தானியாவில் இருந்து இலங்கை அரசை சாடும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இவ்வகை வழக்குகள் தலையிடியாக அமையலாம். அவர்களுக்கு இலங்கையை சாடுவது சுவையாக இருந்தாலும் பிரித்தானியாவை சாடுவது கடினமாக இருக்கும்.

பிரித்தானியரின் பல பழைய தவறுகள் தற்போது அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன.

இந்திய கூர்க்கா படை அங்கத்தவரும் பிரித்தானியாவுக்கு நெருக்கடி வழங்கி வருகின்றனர்.