மார்ச் மாதம் Dubai Mall 50% நுகர்வோரை இழந்தது

மார்ச் மாதம் Dubai Mall 50% நுகர்வோரை இழந்தது

பெப்ரவரி மாதம் 28ம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்ததால் உருவான யுத்தம் காரணமாக UAE நாட்டின் டுபாய் நகரத்தில் உள்ள பிரபல Dubai Mall மார்ச் மாதம் 50% நுகர்வோரை இழந்துள்ளது.

டுபாய் நகரை தளமாக கொண்ட Emirates விமான சேவை மூலம் பயணிப்போர் Dubai Mall சென்று பெருமளவில் கொள்வனவுகளை செய்வதுண்டு. தொடரும் யுத்தம் காரணமாக பயணிகள் இங்கு செல்வது குறைந்துள்ளது.

விலை உயர்ந்த (luxury brands) பொருட்களை விற்பனை செய்யும் Mall of the Emirates இலும் மார்ச் மாத வருமானம் 30% முதல் 50% வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. Louis Vuitton, Dior, Gucci, Cartier, Chanel, Rolex போன்ற luxury brand களும் வருமானத்தை இழந்தவற்றில் அடங்கும்.

UAE நாட்டின் தலைநகரான அபுதாபியில் உள்ள Galleria mall 10% வருமான இழப்பை மட்டும் அடைந்துள்ளது. அபுதாபி Etihad விமான சேவையின் தளம் என்றாலும் Galleria mall சிறியது என்பதாலும், விமான நிலையத்தில் இருந்து தொலைவில் உள்ளதாலும் வழமையாக transit பயணிகள் பெரிதளவில் இங்கு செல்வதில்லை.