மீண்டும் இஸ்ரேல் மீது நடிப்புக்கு குரைக்கும் மேற்கு நாடுகள் 

மீண்டும் இஸ்ரேல் மீது நடிப்புக்கு குரைக்கும் மேற்கு நாடுகள் 

காசாவில் இஸ்ரேல் செய்யும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தும்படி 28 மேற்கு நாடுகள் திங்கள் அறிக்கை விடுத்து முதலை கண்ணீர் விட்டுள்ளன. கனடா, அஸ்ரேலியா, பிரித்தானியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் இந்த அறிக்கையில் இணைந்துள்ளன.

ஜெர்மனி மேற்படி அறிக்கையில் இருந்து விலகி இருந்துள்ளது. ஆனாலும் ஜெர்மனியும் கூடவே முதலை நடிப்புக்கு கண்ணீர் விட்டுள்ளது.

இந்த அறிக்கை “the suffering of civilians in Gaza has reached new depths.” என்றும், “the drip feeding of aid and the inhumane killing of civilians, including children, seeking to meet their most basic needs of water and food.” என்றும் அழுதுள்ளது.

வழமைபோல் அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த அறிக்கையையும் சாடியுள்ளன.

கடந்த மே மாதமும் கனடா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் யுத்தத்தை நிறுத்த கேட்டு அறிக்கை ஒன்றை விட்டிருந்தன. அந்த அறிக்கையில் யுத்த நிறுத்தம் செய்யப்படாவிட்டால் “concrete actions” எடுக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அப்படியானால் அறிக்கை விடுவதே இவர்களின் concrete action ஆக இருக்கும்.