மீண்டும் நெருங்கும் சீன-அஸ்ரேலிய உறவு, 218% wine வரி நிறுத்தம்

மீண்டும் நெருங்கும் சீன-அஸ்ரேலிய உறவு, 218% wine வரி நிறுத்தம்

சீனாவுக்கும் அஸ்ரேலியாவுக்கும் இடையிலான உறவு மீண்டும் நெருக்கம் அடைய ஆரம்பித்து உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக அஸ்ரேலிய wine களுக்கு சீனா நடைமுறை செய்திருந்த 218.4% இறக்குமதி வரி மார்ச் 29ம் திகதி முதல் நிறுத்தப்படுகிறது. இதனால் அஸ்ரேலிய wine சீன சந்தையை முழுமையாக அடைகிறது.

அமெரிக்க சனாதிபதி ரம்ப் காலத்தில் அஸ்ரேலியாவை ஆட்சி செய்த ரம்ப் ஆதரவு அரசு சீனாவுடன் முரண்பட்டது. அதனால் சீனா மெல்ல அஸ்ரேலிய தயாரிப்புகள் மீது மேலதிக இறக்குமதி வரிகளை நடைமுறை செய்தது.

மேற்கு நாடுகள் அஸ்ரேலியா சீனாவுடன் முரண்படுவதை விரும்பினாலும், அஸ்ரேலியாவின் தயாரிப்புகளை கொள்வனவு செய்யும் நிலையில் இல்லை. சீனாவே அஸ்ரேலிய தயாரிப்புகளுக்கு கிடைக்கும் மிகப்பெரிய சந்தை.

2015ம் ஆண்டு இரண்டு நாடுகளும் செய்த உடன்படிக்கை ஒன்றிப்படி அஸ்ரேலிய wine சீனாவில் பூச்சிய இறக்குமதி வரியை கொண்டிருந்தது. அதேநேரம் ஏனைய நாடுகள் 14% இறக்குமதி வரியை கொண்டிருந்தன. இதன் காரணமாக 2019ம் ஆண்டில் சீனா $1.1 பில்லியன் பெறுமதியான wine ஐ அஸ்ரேலியாவில் இருந்து இறக்குமதி செய்திருந்தது.

2020ம் ஆண்டில் சீனா இறக்குமதி செய்த wine களின் 27.46% அஸ்ரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

ஆனால் இரண்டு நாடுகளும் மோதிக்கொண்ட பிரதமர் Scott Morrison ஆட்சி காலத்தில், 2023ம் ஆண்டில், மொத்த சீன wine இறக்குமதியின் 0.14% மட்டுமே அஸ்ரேலிய wine ஆக இருந்தது.