மீண்டும் UN Human Rights Council வரும் அமெரிக்கா

மீண்டும் UN Human Rights Council வரும் அமெரிக்கா

சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஐ.நா.வின் Human Rights Council அமைப்பில் இருந்து வெளியேறி இருந்தார். ஆனால் தற்போதைய பைடென் அரசு மீண்டும் அமெரிக்காவை இந்த அமைப்பில் இணைக்கிறது.

மொத்தம் 47 உறுப்பினர்களை கொண்ட இந்த அவையின் 18 ஆசனங்களுக்கு வரும் புதன்கிழமை தேர்தல் இடம்பெறும். இது தேர்தல் என்று கூறப்பட்டாலும் ஐ.நா. வில் வழமைபோல் இடம்பெறும் மூடிய அறைகளுள் ஏற்படும் தீர்மானங்களே இவை.

அமெரிக்கா போட்டிக்கு பிந்தியதால், இம்முறை போட்டியிட இருந்த இத்தாலி தனது இடத்தை வழங்கி அமெரிக்காவை போட்டியிட வைக்கிறது.

அமெரிக்கா இல்லாத காலத்தில் இந்த அமைப்புள் சீனா தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தி உள்ளது. அதனால் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதே அமெரிக்காவின் முதல் பணியாக இருக்கும்.

மொத்தம் 13 ஆசனங்களை கொண்ட ஆசியா சார்பில் இம்முறை இந்தியா, Kazakhastan, மலேசியா, கட்டார், UAE ஆகிய 5 நாடுகள் போட்டியிடுகின்றன.