ஈரானுடனான யுத்தத்தில் பெப்ரவரி 28, மார்ச் 1 ஆகிய முதல் இரண்டு தினங்களில் மட்டும் அமெரிக்கா $5.6 பில்லியன் செலவு செய்துள்ளது. தற்போது யுத்தம் 11ம் தினத்தை தாண்டி தொடர்கிறது.
அமெரிக்க சட்டப்படி படைகளின் தலைமையகமான பென்டகன் (Pentagon) அமெரிக்க காங்கிரசுக்கு யுத்த செலவு விபரங்களை தெரிவித்தல் அவசியம். அதற்கு ஏற்ப திங்கள் இரகசியமாக காங்கிரசுக்கு வழங்கப்பட்ட செலவு விபரமே வெளியே கசிந்துள்ளது.
அதேவேளை மத்திய கிழக்கில் அமெரிக்கா கொண்டிருந்த Patriot ஏவுகணைகளின் தொகை ஆபத்தான அளவில் குறைந்துள்ளது. அதனால் வட கொரியாவில் இருந்து தென் கொரியாவை பாதுகாக்க தென் கொரியாவில் தான் கொண்டிருந்த Patriot ஏவுகணைகளை அமெரிக்கா மத்திய கிழக்குக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் இச்செயல் தென் கொரியாவை வெறுப்படைய செய்துள்ளது.
