முன்னாள் ஈரான் சனாதிபதி இஸ்ரேல் மொசாட்டின் கைக்குள்?

முன்னாள் ஈரான் சனாதிபதி இஸ்ரேல் மொசாட்டின் கைக்குள்?

முன்னாள் ஈரான் சனாதிபதி Mahmoud Ahmadinejad கடந்த சில ஆண்டுகள் மொசாட் என்ற இஸ்ரேலின் உளவு படையின் கைக்கூலியாக மாறியிருக்கலாம் என்று அமெரிக்காவின் New York Times பத்திரிகையும், இஸ்ரேலின் Haaretz பத்திரிகையும் கூறியுள்ளன.

பெப்ரவரி மாதம் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக ஈரான் மீது செய்த மாபெரும் தாக்குதலின் நோக்கம் ஈரானின் அரசை அழித்து அங்கு Ahmadinejad தலைமையில் ஒரு பொம்மை அரசை அமைப்பதே என்றும் கூறப்படுகிறது.

ஆனால் ஈரான் அமெரிக்காவும், இஸ்ரேலும் கணித்தபடி ஈரான் சில தினங்களில் விழுந்து விடவில்லை. பதிலுக்கு யுத்தம் 5 மாதங்களாக அமெரிக்காவை வருத்தி வருகிறது.

இஸ்ரேலின் மொசாட் 2022ம் ஆண்டில் இருந்து Ahmadinejad ஐ தனது வலைக்குள் விழுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளது.

அக்கால மொசாட்டின் தலைவர் David Barnea யும், இஸ்ரேலின் உளவு அதிகாரிகளும் Ahmadinejad ஐ Hungary நாட்டில் உள்ள Ludovika பல்கலைக்கழகத்தில் சந்தித்து உரையாடி உள்ளனர்.

Ahmadinejad உடன் உரையாடியதை மொசாட் அமெரிக்காவின் உளவு அமைப்பான CIA க்கும் தெரிவித்து உள்ளது.

Ahmadinejad டின் பயண மற்றும் தங்குமிட செலவுகளை மொசாட்டே பொறுப்பு எடுத்ததாகவும் கூறப்படுகிறது.