முன்னாள் உதவி சனாதிபதி Mike Pence சனாதிபதி போட்டியில்

முன்னாள் உதவி சனாதிபதி Mike Pence சனாதிபதி போட்டியில்

அமெரிக்காவில் ரம்ப் சனாதிபதியாக இருந்த காலத்தில் உதவி சனாதிபதியாக இருந்த பென்ஸ் (Mike Pence) 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

பென்ஸ் இந்த அறிவிப்பை ஜூன் மாதம் 7ம் திகதி தனது 64 ஆவது பிறந்த தினத்தில் செய்யவுள்ளார் என்று கூறப்படுகிறது.

ரம்ப், பென்ஸ், DeSantis, Nikki Haley, Chris Christie, Vivek Ramaswamy, Doug Burgum, Tim Scott, Asa Hutchinson, Chris Sununu ஆகியோர் Republican கட்சிக்குள் முதலில் போட்டியிடுவர். அந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் இறுதி தேர்தலில் போட்டியிடுவர்.

ரம்ப் இந்த தடவை முன்னரைப்போல் ஆதிக்கம் செலுத்துவது கடினமாக இருக்கும். ஆனாலும் ரம்புக்கு கட்சிக்குள் கணிசமான அளவு நிரந்தர ஆதரவாளர் உண்டு.