முன்னாள் மருமகளின் தூதர் பதவியை பறிப்பாரா ரம்ப்?

முன்னாள் மருமகளின் தூதர் பதவியை பறிப்பாரா ரம்ப்?

அமெரிக்க சனாதிபதி ரம்பின் மூத்த மகனான Donald Trump Jr. க்கு மனைவியாக தீர்மானம் (engaged from 2018 to 2024) செய்யப்பட்டிருந்த Kimberly Guilfoyle என்பவர் இலஞ்சம் கேட்டதால் அவரின் தூதர் பதவியை ரம்ப் பறிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரம்புக்கு வழமையாக நன்கொடை வழங்கும் Eric Deters என்பவர் Kimberly தன்னிடம் $100,000 கேட்டதாகவும் அந்த text message தன்னிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார். Kimberly தனது American Express credit card கடனை அடைக்கவே இத்தொகையை கேட்டதாகவும் Deters கூறியுள்ளார்.

Kimberly கிரேக்கத்துக்கான அமெரிக்க தூதுவராக அமெரிக்க காங்கிரசால் ஏற்றுக்கொள்ள சில தினங்களுக்கு முன்னரேயே இந்த இலஞ்ச கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் Deters அத்தொகையை Kimberly க்கு வழங்கி இருக்கவில்லை.

Kimberly கிரேக்க அதிகாரிகளை மிரட்டுவதாகவும், பணம் பறிப்பதாகவும் கூடவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவரின் சட்டத்தரணி Kimberly தவறு எதையும் செய்யவில்லை என்று கூறினாலும் Kimberly இதுவரை கருத்து எதையும் நேரடியாக கூறவில்லை.

Kimberly 2001 முதல் 2006 வரை Democratic கட்சி அரசியல்வாதியான Gavin Newsom என்பவரையும், 2006 முதல் 2009 வரை Eric Villency என்பவரையும் திருமணம் செய்திருந்தவர்.