முழு லெபனானும் ஏரிய வேண்டும் என்கிறார் இஸ்ரேல் அமைச்சர் 

முழு லெபனானும் ஏரிய வேண்டும் என்கிறார் இஸ்ரேல் அமைச்சர் 

முழு லெபனானும் எரிய வேண்டும் (“all of Lebanon must burn”) என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Itamar Ben-Gvir இன்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.

அத்துடன் அழும் ஒவ்வொரு இஸ்ரேல் தாய்க்கு பதிலடியாக ஆயிரம் லெபனான் தாய்மார் அழ வேண்டும் ( “For every tear of an Israeli mother, a thousand Lebanese mothers must weep”) என்றும் Ben-Gvir இன்று கூறியுள்ளார்.

லெபனானை ஆக்கிரமித்து, அங்கு கொலைகளையும், அழிவுகளையும் செய்யும் இஸ்ரேல் படைகளை வியாழன் ஈரான் சார்பு ஹெஸ்புல்லா ஆயுத குழு தாக்கியதில் 4 இஸ்ரேல் படையினர் பலியானதாலேயே Ben-Gvir மூர்க்கம் கொண்டுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு லெபனானில்  குறைந்தது 47 பேர் பலியாகி உள்ளனர்.