கனடா ஒரு முதலாம் வர்க்க நாடு என்றாலும் அதிகரிக்கும் எண்ணிக்கையிலான கனடிய அரசியல்வாதிகள் மூன்றாம் உலக (third-world) அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவில் குப்பாடி அரசியல் செய்ய ஆரம்பித்து உள்ளனர்.
2025ம் ஆண்டு அக்கால லிபெரல் (Liberal) கட்சி பிரதமர் ரூடோவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியபோது பின் கதவால் மார்க் கார்னி என்பவர் கொண்டுவரப்பட்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தேர்தலில் லிபெரல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் மொத்த 343 ஆசனங்களில் லிபரல் கட்சி 169 ஆசங்களை மட்டுமே கைப்பற்றி ஒரு சிறுபான்மை ஆட்சியை அமைத்தது.
சிறுபான்மை ஆட்சியை வைத்து எதுவும் செய்ய முடியாது என்பதால் குழிபறிப்பு அரசியல் ஆரம்பமாகியது.
கடந்த மாதம் Nova Scotia மாநிலத்து Conservative பாராளுமன்ற உறுப்பினர் Chris d’Entermont லிபெரல் கட்சிக்கு தாவினார்.
அதற்கு பின் Matt Jeneroux என்ற Alberta மாநில Conservative பாராளுமன்ற உறுப்பினரும் Conservative கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இவர் மீது வெறுப்புகள் அதிகரிக்க தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். அன்றிலிருந்து இவர் பாராளுமன்ற வாக்கெடுப்புகளில் பங்கெடுப்பது இல்லை. எதிர்ப்பு வாக்கு ஒன்று குறைவதால் அச்செயல் லிபரல் கட்சிக்கு நயமாகியது.
இன்று வியாழன் Ontario மாநில பாராளுமன்ற உறுப்பினர் Michael Ma தான் லிபெரல் கட்சியில் இருந்து Conservative கட்சிக்கு தாவுவதாக கூறியுள்ளார். முதல் தினமான புதன்கிழமை Conservative கட்சியின் Christmas party யில் கலந்து கொண்ட இவர் மறுநாள் கட்சி தாவியுள்ளார்.
இருவர் கட்சி தாவியதால் தற்போது லிபெரல் 171 ஆசனங்களை கொண்டுள்ளது. பெரும்பான்மை ஆட்சி அமைக்க மேலும் ஒருவர் விரைவில் கொள்வனவு செய்யப்படும் சாத்தியக்கூறு உண்டு.
இவ்வகை குப்பாடி அரசியலை தடுக்கவே 1985ம் இந்தியாவில் கட்சி தாவல் தடை சட்டம் (anti-defection law) நடைமுறை செய்யப்பட்டது. அவ்வகை சட்டம் கனடாவுக்கு வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஆனாலும் திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
