மேலுமொரு காசா யுத்தநிறுத்த தீர்மானம் ஐ.நா. வில் தோல்வி

மேலுமொரு காசா யுத்தநிறுத்த தீர்மானம் ஐ.நா. வில் தோல்வி

இன்று வெள்ளிக்கிழமை ஐ. நா. பாதுகாப்பு சபையில் (Security Council) வாக்கெடுப்புக்கு வந்திருந்த மேலுமொரு காசா யுத்தநிறுத்த தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது.

இம்முறை தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு எடுத்து வந்தது அமெரிக்கா. அதையே ரஷ்யாவும், சீனாவும் தமது வீட்டோ வாக்குகள் மூலம் தோல்வியுற செய்துள்ளன.

இதற்கு முன் வாக்கெடுப்புக்கு வந்திருந்த 3 தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ மூலம் தோல்வியுற செய்திருந்தது. அந்த 3 தீர்மானங்களையும் ரஷ்யாவும், சீனாவும் ஆதரித்து இருந்தன.

அமெரிக்கா இன்று எடுத்து வந்த தீர்மானத்தில் தெளிவற்ற சொற்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தீர்மானம் “determines the imperative of an immediate and sustained cease-fire” என்கிறது என்றும் அதில் உள்ள “imperative” என்ற சொல் ‘யுத்தத்தை நிறுத்து’ என்று கூறுவதற்கு பதிலாக ‘யுத்த நிறுத்தம் அவசியமானது’ என்று கூறி ஏமாற்ற முனைகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.