மேலும் இரண்டு அமெரிக்க வங்கிகள் ஆபத்தில்

மேலும் இரண்டு அமெரிக்க வங்கிகள் ஆபத்தில்

Silicon Valley Bank, Signature Bank, First Republic Bank ஆகிய 3 அமெரிக்க வங்கிகளும் ஏற்கனவே முறிந்த நிலையில், இன்று செவ்வாய் மேலும் 2 வங்கிகள் ஆபத்தில் உள்ளதாக தெரிகிறது.

Pacific Western Bank (PACW), Western Alliance Bank (WAL) ஆகிய இரண்டு வங்கிகளின் பங்குசந்தை பங்கின் பெறுமதிகள் இன்று செவ்வாய் பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளன. முன்னையதின் பங்கு ஒன்றின் விலை சுமார் 42% ஆலும், பின்னையதின் விலை சுமார் 20% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளன.

அத்துடன் அமெரிக்காவின் Zion Bank, Comerica Bank, Key Bank ஆகிய வங்கிகளின் பங்குகளின் பெறுமதிகளும் இன்று பாரிய வீழ்ச்சி அடைந்துள்ளன.

2008ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்டது போல் அங்கு மேலும் ஒரு வங்கி துறை வீழ்ச்சி ஏற்படலாம் என்ற பயம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் அதிகாரிகள் அந்நிலை ஏற்படாது என்று கூறுகின்றனர்.