அமெரிக்கா MoU வுக்கு அமைய நடைமுறை செய்திருந்த ஈரானுடனான யுத்த நிறுத்தத்தை முறித்து மீண்டும் ஈரானை தாக்க ஆரம்பித்துள்ளது. பதிலுக்கு ஈரானும் பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்க ஆரம்பித்துள்ளது.
அண்மையில் அமெரிக்காவும் ஈரானும் செய்துகொண்ட யுத்த நிறுத்த இணக்கப்படி இஸ்ரேல் லெபனான் மீது செய்யும் தாக்குதல்களும் நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் இஸ்ரேல் தொடர்ந்தும் லெபனானை தாக்கி வருகிறது. இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்த முடியாது அமெரிக்கா முழிக்கும் நிலையில் ஈரான் தனது அனுமதியின்றி ஹோர்முஸ் ஊடு செல்லும் கப்பல்களை மூன்றை தாக்கியது.
இதனால் விசனம் கொண்ட அமெரிக்கா ஈரானை தாக்க ஆரம்பித்தது.
