யுத்த நிறுத்த காலத்திலும் இஸ்ரேல் Genocide செய்கிறது, கூறுவது ஐ,நா.

யுத்த நிறுத்த காலத்திலும் இஸ்ரேல் Genocide செய்கிறது, கூறுவது ஐ,நா.

கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்கா காசாவில் யுத்த நிறுத்தத்தை நடைமுறை செய்தாலும் இஸ்ரேல் தொடர்ந்தும் காசாவில் genocide செய்கிறது என்று ஐ.நா. விசாரணை குழு ஒன்று நேற்று திங்கள் கூறியுள்ளது.

UN Independent International Commission of Inquiry on the Occupied Palestinian Territory இஸ்ரேல் பலஸ்தீனரை முற்றாக அழிக்கும் நோக்கத்தில் genocidal செய்வதாக கூறியுள்ளது.

இஸ்ரேல் பெரும் குண்டுகளையும், drone களையும், எறிகணைகளை மக்கள் செறிவாக வாழும் இடங்களை நோக்கி ஏவுவதாக மேற்படி அறிக்கை குற்றம் சுமத்தியுள்ளது.

யுத்த நிறுத்த ஆரம்பத்தில் வரையப்பட்ட Yellow Line என்ற இரு தரப்புகளையும் பிரிக்கும் எல்லையையும் இஸ்ரேல் பலஸ்தீனர் பக்கம் நோக்கி மெல்ல நகர்த்தி வருவதாகவும் அறிக்கை குற்றம் சுமத்தியுள்ளது.

இஸ்ரேலின் genocidal வன்முறைகள் West Bank பலஸ்தீனர் மீதும் தொடர்கின்றன என்றும் அறிக்கை கூறியுள்ளது.