தான் ஆட்சிக்கு வந்தால் யூக்கிறேன் யுத்தத்தை 24 மணி நேரத்தில் சமாதானத்துக்கு கொண்டு வருவேன் என்று தேர்தல் காலத்தில் ரம்ப் கூறியிருந்தார். ஆனால் அவரின் 6 மாத கால ஆட்சியின் பின் அவர் பாதை மாறி முன்னாள் சனாதிபதி பைடென் வழியில் செல்கிறார்.
செவ்வாய்க்கிழமை ரம்ப் “I am not happy with Putin” என்று கூறியுள்ளார்.
கடந்த இரண்டு தினங்களாக ரம்ப் ரஷ்ய சனாதிபதி பூட்டின் மீது வசைபாடி வருவதோடு யூக்கிறேனுக்கு ஆயுதங்களை வழங்கவும் அறிவித்துள்ளார். முன்னர் பைடென் யூகிறேனுக்கு ஆயுதங்களை வழங்கியபோது அதை கடுமையாக எதிர்த்து இருந்தவர் ரம்ப்.
மேற்கு எவ்வளவு ஆயுதங்களை யூகிறேனுக்கு வழங்கினாலும் யூக்கிறேன் இந்த யுத்தத்தை வெற்றி அடையப்போவது இல்லை. ஏற்கனவே அடைந்த இழப்புகள் காரணமாக ரஷ்யாவும் வெற்றியை கொண்டாட முடியாது.
ரஷ்யா மீது தடைகளையும் அதிகரிக்க ரம்ப் அறிவித்துள்ளார்.