யூத வன்முறையாளர் பயங்கரவாதிகள், கூறுவது அமெரிக்க தூதர் 

யூத வன்முறையாளர் பயங்கரவாதிகள், கூறுவது அமெரிக்க தூதர் 

West Bank நகரங்களில் வாழும் பலஸ்தீனர் மீது வன்முறைகள் செய்யும் அப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள யூத வன்முறையாளரை இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் Mike Huckabee பயங்கரவாதிகள் (terrorists) என்று விபரித்துள்ளார். 

சனிக்கிழமை Turmus Ayya என்ற West Bank நகரில் வாழும் பலஸ்தீன அமெரிக்கர்களின் வீடுகளுக்கு சென்ற Huckabee அங்கே யூத வன்முறையாளர் செய்த அழிவுகளை பார்வையிட்ட பின்னரே யூத வன்முறையாளரை பயங்கரவாதிகள் என்றுள்ளார்.

ஆக்கிரமித்துள்ள இந்த யூதர்கள் செய்யும் வன்முறைகளை இஸ்ரேல் இராணுவம் கண்டும் காணாமல் ஆதரித்து வந்துள்ளது. மறுபுறம் மேற்படி வன்முறைகளை ஆவணப்படுத்த செல்லும் பத்திரிகையாளரையும், பாதிக்கப்பட்டோருக்கு உணவுகள் எடுத்து செல்லும் தொண்டர்களையும் இஸ்ரேல் இராணுவம்தடுத்து விரட்டுகிறது.

Bazariya என்ற West Bank நகரில் உள்ள இஸ்லாமிய பள்ளி ஒன்றை எரித்த ஆக்கிரமித்துள்ள யூத வன்முறையாளர் அதன் சுவரில் “Huckabee regards from the terrorists” என்று எழுதி Huckabee யை நையாண்டி செய்திருந்தனர்.