ரணில் விக்கிரமசிங்கே கனவுடன் Nikki Haley?

ரணில் விக்கிரமசிங்கே கனவுடன் Nikki Haley?

அமெரிக்க Republican கட்சி வரும் நவம்பரில் இடம்பெறவுள்ள சனாதிபதி தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் நபரை தெரிவு செய்ய ஒவ்வொரு மாநிலத்திலும் உட்கட்சி தேர்தலை செய்து வருகிறது. இறுதியாக உட்கட்சி தேர்தல் இடம்பெற்ற மாநிலம் South Carolina. இது உட்கட்சி தேர்தல் இடம்பெற்ற 4வது மாநிலம்.

ஆரம்பத்தில் பலர் Republican உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டாலும் ரம்புடன் போட்டியிட முடியாது என்பதை உணர்ந்த அவர்கள் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளனர். நிக்கி ஹேலி மட்டும் தொடர்ந்தும் ரம்புடன் போட்டியிடுகிறார்.

ஆனாலும் இடம்பெற்ற 4 மாநில தேர்தல்களிலும் ரம்ப் பெரு வெற்றியை அடைந்துள்ளார். South Carolina மாநிலத்தில் ரம்ப் 60% வாக்குகளை பெற, நிக்கி 40% வாக்குகளையே பெறுகிறார். தனது சொந்த மாநிலமான இதில் நிக்கி 2 தடவைகள் ஆளுநர் ஆக தெரிவு செய்யப்பட்டு இருந்தாலும் இம்முறை ரம்பிடம் தோல்வி அடைந்துள்ளார்.

ரம்ப் வெற்றி அடைவது உறுதி என்பது தெரிந்தும் ஏன் நிக்கி தொடர்ந்தும் போட்டியில் உள்ளார்?

ரம்ப் பெரும் மக்கள் ஆதரவை கொண்டிருந்தாலும் அவர் மீது பல உயர் நீதிமன்ற வழக்குகள் தொடர்கின்றன. இதில் ஒன்றாவது ரம்ப் சனாதிபதியாக போட்டியிட முடியாது என்று தீர்ப்பு கூறினால் படுதோல்வி அடையும் நிக்கிக்கு Republican சார்பில் போட்டியிடும் சந்தர்ப்பம் வேறு வழியின்றி கிடைக்கலாம். ஒரு ஆசனத்தையும் வெற்றி பெறாத UNP யின் ரணில் சனாதிபதி ஆனதுபோல்.