ரம்பின் இன்றைய நகர்வு Department of War

ரம்பின் இன்றைய நகர்வு Department of War

அமெரிக்க சனாதிபதி ரம்ப் அமெரிக்காவின் Department of Defense என்று அழைக்கப்பட்ட திணைக்களத்தை Department of War என்று பெயரிட executive order மூலம் பணித்துள்ளார். ஆனாலும் இந்த புதிய பெயர் அமெரிக்க காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்படல் அவசியம்.

World War I, World War II காலத்தில் இந்த திணைக்களம் Department of War என்றே அழைக்கப்பட்டது என்று தன் முனைவை நியாயப்படுத்துகிறார் ரம்ப். 1789 முதல் 1947 வரை இது Department of War என்றே அழைக்கப்பட்டது.

காங்கிரஸ் ரம்பின் புதிய பெயரை ஏற்க மறுத்தால் Department of War இரண்டாம் பெயராக இடம்பெறலாம்.

ஆரம்பத்தில் பிரித்தானியாவும், அது சார்பான 13 அமெரிக்க colony களுடனுடம் என்னைய colony களுடன் மோதிக்கொண்டதால், அமெரிக்கா என்ற நாடு முழுமை பெற்று இருக்காத நிலையில் defense ஒரு அர்த்தமுள்ள பெயராக இருக்கவில்லை.

1947ம் ஆண்டு National Military Establishment என்ற திணைக்களத்தின் கீழ் அனைத்து படைகளும் ஒன்றாக இணைக்கப்பட்டன. 1949ம் ஆண்டு இது Department of Defense ஆனது.