ரம்பின் கட்சிக்கு வாக்களித்தால் ஆளுக்கு $5,000, கூறுவது ரம்ப் 

ரம்பின் கட்சிக்கு வாக்களித்தால் ஆளுக்கு $5,000, கூறுவது ரம்ப் 

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள midterm தேர்தலில் தனது கட்சியான Republican கட்சி காங்கிரசின் Senate, House ஆகிய இரண்டு சபைகளையும் பெரும்பான்மை ஆசனங்களுடன் வென்றால் வாக்களிக்கும் வயதுடைய ஒவ்வொருவருக்கும் $5,000 வழங்க உள்ளதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் புதன்கிழமை கூறியுள்ளார்.

இந்த தொகையை ரம்ப் “Trump dividend” என்றும் அழைத்துள்ளார்.

முதலாவது குறிப்பு, ரம்புக்கு நிறுவனம் ஒன்று தனது பங்காளருக்கு இலாபத்தின் ஒரு பகுதியை dividend ஆக வழங்குவதற்கும், சட்டத்துக்கு முரணாக, சனநாயகத்துக்கு முரணாக வாக்கு வாங்குவதற்கும் இடையேயான வித்தியாசம் தெரியாது.

இரண்டாவது குறிப்பு, ரம்புக்கு அவரின் Republican கட்சி Senate, House சபைகள் இரண்டையும் இழக்கலாம் என்ற பயம் தொற்றிக்கொண்டுள்ளது. Democratic கட்சி Senate, House இரண்டையும் கைப்பற்றினால் ரம்புக்கு எதுவும் நடக்கலாம்; உரிமைகள் பறிக்கப்படலாம், சனாதிபதி பதவி பறிக்கப்பலாம், சிறைக்கு அனுப்பப்படலாம்.