அமெரிக்க சனாதிபதி ரம்பின் இரண்டாம் ஆட்சியின் ஆரம்பத்தில் ரம்பின் வலது கரம் போல் இயங்கியவர் Tesla நிறுவன CEO இலான் மஸ்க். அண்மையில் ரம்ப் ஆட்சியில் இருந்து விலகிய இவர் செவ்வாய்க்கிழமை ரம்பின் வரவு-செலவை கடுமையாக வசை பாடியுள்ளார்.
ரம்ப் “big and beautiful” என்று அழைத்த வரவு-செலவு திட்டத்தை இலான் மஸ்க் “disgusting abomination” என்று அழைத்துள்ளார்.
அத்துடன் இந்த வரவு-செலவு திட்டத்தை ஆதரிக்கும் அரசியல்வாதிகளை அடுத்த நவம்பர் தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் கூறியுள்ளார் இலான் மஸ்க்.
ஏனைய வரவு-செலவு திட்டங்களை போல் ரம்பின் வரவு-செலவு திட்டமும் அமெரிக்காவின் கடன் தொகையை அதிகரிக்கும் என்பதே மஸ்கின் குற்றச்சாட்டு.
மஸ்கின் இந்த செயலால் திகைப்படைந்து உள்ளது வெள்ளை மாளிகை.