அமெரிக்க சனாதிபதி ரம்ப் நடைமுறை செய்த புதிய இறக்குமதி வரியால் அமெரிக்க வாகன தயாரிப்பு நிறுவனமான GM (General Motors) க்கு இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் $1.1 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் முழு ஆண்டுக்கும் சுமார் $4 பில்லியன் முதல் $5 பில்லியன் வரையான இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.
2024ம் ஆண்டு GM $14.9 பில்லியன் இலாபம் அடைந்திருந்தாலும் 2025ம் ஆண்டில் $10 பில்லியன் முதல் $12.5 பில்லியன் வரையிலான இலாபத்தையே அடையும் என்று GM கூறியுள்ளது.
கனடா, மெக்ஸிக்கோ ஆகிய இரண்டு நாடுகளிலும் உள்ள GM தொழிசாலைகளில் தயாரித்த GM வாகனங்கள் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும்போது 25% இறக்குமதி வரி செலுத்துகின்றன. 2024ம் ஆண்டு 1 மில்லியன் இவ்வகை வாகனங்கள் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இறக்குமதி செய்யப்படும் சில வாகன பாகங்களுக்கும் ரம்பின் 25% வரி உண்டு.