ரம்புக்கான ஆதரவு 32% ஆக வீழ்ச்சி

ரம்புக்கான ஆதரவு 32% ஆக வீழ்ச்சி

அமெரிக்க சனாதிபதி ரம்பின் ஆட்சிக்கு கிடைக்கும் ஆதரவு (approval rating) 32% ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது என்கிறது Reuters/Ipsos ஆய்வு அமைப்பு. இதுவே அவரின் 6-ஆண்டு அரசியல் கொள்கைகளுக்கு கிடைக்கும் அதி குறைந்த ஆதரவாகும்.

அதேநேரம் 41% ஆக இருந்த ரம்பின் அரசியல் கொள்கைகளை நிராகரிப்போர் தொகை அளவு தற்போது 66% ஆக அதிகரித்து உள்ளது.

குறிப்பாக ரம்பின் இறக்குமதி வரி கொள்கைகளும், ஈரானுடனான யுத்தமும் ரம்ப் மீது அமெரிக்கர் வெறுப்பு அடையகாரணமாகின. ஈரான் யுத்தத்தை 66% அமெரிக்கர் வெறுக்கின்றனர்.

2025ம் ஆண்டின் ஆரம்பத்தில் ரம்ப் தனது இரண்டாம் சனாதிபதி ஆட்சியை 47% ஆதரவுடன் ஆரம்பித்து இருந்தார். அன்றில் இருந்து இவருக்கான ஆதரவு படிப்படியாக வீழ்ச்சி அடைந்து தற்போது 32% ஆகியுள்ளது.

ரம்புக்கு முன் சனாதிபதியாக இருந்த பைடெனின் பதவி பறிக்கப்பட்ட வீழ்ச்சி காலத்தில் பைடெனுக்கு இருந்த ஆதரவு 35%.

ரம்பின் கட்சியான Republican கட்சியினரை மட்டும் கருத்தில் கொண்டாலும் ரம்புக்கான ஆதரவு 82% இல் இருந்து 73% ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள mid-term தேர்தலில் ரம்பின் Republican கட்சி பெரும் வீழ்ச்சியை அடையும் என்று கருதப்படுகிறது.