ரம்புக்கு அடிபணிந்த கனடிய பிரதமர் கார்னி 

ரம்புக்கு அடிபணிந்த கனடிய பிரதமர் கார்னி 

அமெரிக்க சனாதிபதி ரம்பின் மிரட்டலுக்கு கனடிய பிரதமர் கார்னி மீண்டும் அடிபணிந்துள்ளார். இச்செயல் கனடாவுக்கு 15 ஆண்டுகளில் மொத்தம் C$320 மில்லியன் இழப்பை ஏற்படுத்தும் என்பதை கார்னியின் அலுவலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

கனடாவின் Windsor நகரத்துக்கும் அமெரிக்காவின் Detroit நகரத்துக்கும் இடையில் புதியதோர் பாலம் அமைக்க கனடாவும், அமெரிக்காவின் Michigan மாநிலமும் விரும்பின. ஆனால் அமெரிக்கா தரப்பில் இழுத்தடிப்பு இடம்பெற, கனடா தனது சொந்த பணத்தில் பாலத்தை அமைக்க முன்வந்தது. 

Gordie Howe என்ற இந்த புதிய பாலத்தை கட்ட கனடா C$6.4 பில்லியன்சொந்த பணத்தை செலவழித்து.

2012ம் ஆண்டு கனடாவும், Michigan மாநிலமும் உடன்படிக்கையின்படி ஆரம்ப வருமானம் முதலில் கனடாவின்  கட்டுமான கடனை அடைக்க பயன்படும். பின்னரே வருமானம் கனடாவுக்கும், Michigan மாநிலத்துக்கும் இடையே பங்கிடப்படும்.

ஆனால் ரம்ப் கார்னி மீது திணித்த திட்டப்படி முதல் 15 ஆண்டுகளின் வருமானத்தின் 50% அமெரிக்க மத்திய அரசின் “economic development fund” க்கு செலுத்தப்படும். அந்த பணத்தை அமெரிக்கா தான் விரும்பியபடி செலவழிக்கும்.

கார்னி தேர்தல் காலத்தில் தான் “elbows up” வகையில் வீர கொள்கைகளை கொண்டிருப்பேன் என்று கூறியிருந்தாலும் இன்று அவர் ரம்புக்கு அடிபணிந்து ஆட்சியை கொண்டிருக்க முனைகிறார்.

ரம்புக்கு பயந்து கார்னி ஏற்கனவே கனடா நடைமுறை செய்யவிருந்த digital service tax என்ற வரியையும் கைவிட்டு இருந்தார்.

Gordon (Gordie) Howe என்பவர் கனடாவில் பிறந்து Detroit Red Wings போன்ற Hockey விளையாட்டு அணிகளில் விளையாடிய பிரபல hockey வீரர்.