ஜூலை 1ம் திகதி அமெரிக்காவுக்கும், Bosnia and Herzegovina வுக்கும் இடையில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியின்போது அமெரிக்க அணியின் Folarin Balogun என்பவருக்கு அவரின் தடை செய்யப்பட்ட விளையாடல் (foul play) காரணமாக Red Card தண்டனை வழங்கப்பட்டு இருந்தது.
Red Card தண்டனை விதிக்கு அமைய Balogun அடுத்த போட்டியில் பங்கெடுப்பது தடை செய்யப்பட்டது. இதை விரும்பாத அமெரிக்க சனாதிபதி ரம்ப் உடனே FIFA தலைவர் Gianni Infantino வுடன் தொடர்பு கொண்டு Balogun மீதான தடையை நீக்க கேட்டிருந்தார்.
ரம்புக்கு அடிபணிந்த FIFA தலைவர் FIFA விதிகளை புறம் தள்ளி Balogun மீதான தடையை நீக்கியுள்ளார். FIFA தலைவரின் இந்த தன்னிசையான செயலுக்கு பல அணிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
பெல்ஜியம் அணி Balogun மீதான தடை நீக்கப்பட்டமையை எதிர்த்து விசயத்தை விசாரணை செய்ய கேட்டுள்ளது.
UEFA என்ற ஐரோப்பிய உதைபந்தாட்ட அமைப்பும் FIFA தலைவரை சாடி, விசாரணையை கேட்டுள்ளது.
DFB என்ற ஜெர்மன் உதைபந்தாட்ட அமைப்பும் FIFA தலைவரின் செயல் FIFA வின் நம்பகத்துக்கு குந்தகம் என்றுள்ளது.
