பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அரசு தான் நடைமுறை செய்யவிருந்த Digital Sales Tax (DST) என்ற புதிய வரியை அமெரிக்க சனாதிபதி ரம்பின் அழுத்தம் காரணமாக கைவிடுகிறது.
இந்த அறிவிப்பை கனடா ஞாயிறு மாலை தெரிவித்து உள்ளது. இந்த அறிவிப்புக்கு முன் ரம்ப் தான் கனடாவுடன், DST வரி காரணமாக, மேற்கொண்ட பேசப்போவது இல்லை என்று கூறி மிரட்டி இருந்தார்.
கனடிய அரசியல்வாதிகள் தமது கதிரைகளை பாதுகாக்க நீண்ட காலமாக இவ்வாறு அமெரிக்க அரசுகளுக்கு அடிபணிந்து வருகிறது.
இந்திய உளவுப்படை கனடாவில் சீக்கியரை படுகொலை செய்தது என்ற குற்றசாட்டை ஒரு கையில் வைத்துக்கொண்டே கார்னி இந்திய பிரதமர் மோதியை அண்மையில் கனடாவில் இடம்பெற்ற G7 அமர்வுக்கு அழைத்திருந்தார். அதுவும் ரம்பின் அழுத்தமாக இருந்திருக்கும்.
DST யை நிறுத்துவது அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையில் நல்லதொரு வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்த உதவும் என்று கார்னி அரசு கூறுகிறது. ஆனால் ரம்ப் கனடாவுக்கு எதையும் விட்டுக்கொடுக்க போவது இல்லை. கனடா அதை விரைவில் அறியும்.
மக்களின் வரிப்பணத்தில் பாராளுமன்றில் குந்தியிருந்து ஒரு சட்டத்தை வரைந்து, தற்போது மீன்றும் மக்களின் வரிப்பணத்தில் பாராளுமன்றத்தில் குந்தியிருந்து அந்த சட்டத்தை இரத்து செய்யவுள்ளது கனடிய அரசியல்.