அமெரிக்க சனாதிபதி ரம்புக்கு Nobel Peace Prize வழங்குமாறு தாம் பரிந்துரைக்க உள்ளதாக பாகிஸ்தான் இன்று சனிக்கிழமை கூறியுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் மூண்ட யுத்தத்தை ரம்ப் விரைந்து தடுத்தமையே காரணம் என்கிறது பாகிஸ்தான்.
மேற்படி சமாதானத்தின் பின் ரம்ப் தான் ஒரு அணுவாயுத யுத்தத்தை தவிர்த்து, பல மில்லியன் உயிர்களை காப்பாற்றியதாகவும், ஆனால் அதற்கான credit தனக்கு வழங்கப்படவில்லை என்றும் பல தடவைகள் குறை கூறியிருந்தார்.
அதேவேளை இந்தியா தான் பாகிஸ்தானுடன் செய்த சமாதானத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை என்று கூறியுள்ளது.
அத்துடன் ரம்ப் இந்திய-பாகிஸ்தான் முரண்பாடுகளை தனது தலைமையில் தீர்த்துவைக்க விரும்புவதாக கூறினாலும் இந்த விசயத்தில் மூன்றாம் தரப்புக்கு இடமில்லை என்று இந்தியா திடமாக கூறியுள்ளது.
பாகிஸ்தான் இராணுவ தலைவர் Asim Munir ரம்பின் அழைப்பை ஏற்று அண்மையில் வெள்ளை மாளிகை சென்று ரம்புடன் விருந்துண்டு உரையாடி இருந்தார்.