அமெரிக்க படைகளின் தென் அமெரிக்க பகுதிக்கு பொறுப்பான Southern Command பிரிவின் கட்டளை அதிகாரி அட்மிரல் Alvin Holsey திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலக சட்டங்களுக்கு எதிராக ரம்ப் அரசு அட்மிரலின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச கடலில் போதை கடத்தும் வள்ளங்கள் என்று கூறி பல வள்ளங்களை தாக்கி அழித்தமை அட்மிரலின் பதவி விலகலுக்கு காரணமாக அமையலாம்.
1988ம் ஆண்டு அமெரிக்க படைகளில் இணைந்த அட்மிரல் Holsey அமெரிக்க படைகளில் 37 ஆண்டுகள் சேவையாற்றி இறுதியில் Sothern Command கட்டளை அதிகாரி ஆனவர். இவரின் இந்த பதவி 3 ஆண்டுகள் நீடித்து இருக்கவேண்டும். ஆனாலும் ரம்ப் ஆட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக 1 ஆண்டு சேவையின் பின் இவர் ஓய்வு பெறுகிறார்.
தென் அமெரிக்கா பக்கம், சர்வதேச கடலில் இதுவரை குறைந்தது 6 வள்ளங்கள் போதை கடத்துகின்றன என்று கூறி ரம்ப் அரசு விசாரணை, ஆதரங்கள் எதுவும் இன்றி தாக்கி அழித்துள்ளது. இந்த தாக்குதல்களுக்கு குறைந்தது 27 பேர் பலியாகி உள்ளனர்.
Holsey மட்டுமன்றி ரம்பின் வெறுப்புக்கு காரணமான பல இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கப்பட்டு அல்லது விலகி உள்ளனர். அவர்களில் சிலர் வருமாறு:
Chairman of the Joint Chiefs ஜெனரல் CQ Brown
Chief of Naval Operations அட்மிரல் Lisa Franchetti
Vice chief of staff of the Air Force ஜெனரல் James Slife
Head of the Defense Intelligence Agency லெப். ஜெனரல் Jeffrey Kruse