திங்கள் அக்டோபர் 27ம் திகதி மலேசியாவில் இடம்பெற்ற ASEAN நாடுகளின் அமர்வுக்கு இந்திய பிரதமர் மோதி நேரடியாக செல்வதை தவிர்த்திருந்தார். இதற்கு இந்திய மாநிலங்களில் சிலவற்றில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் ஒரு காரணமாகலாம் என்றாலும் இந்தியாவுடன் முரண்படும் ரம்பை நேரடியாக சந்திக்க விரும்பாமையே முதல் காரணம் ஆகலாம் என்று கருதப்படுகிறது. மோதி இணையம் மூலம் ASEAN அமர்வில் பங்கெடுத்து இருந்தார்.
இந்த அமர்வுக்கு அமெரிக்க சனாதிபதி ரம்ப் சென்று இருந்தது மட்டுமன்றி, இக்காலத்தில் அமெரிக்க அதிகாரிகள் சீன பொருட்கள் மீது அமெரிக்கா திணிக்க இருந்த 100% மேலதிக இறக்குமதி வரியையும் கைவிடுவதாக அறிவித்து இருந்தனர்.
ஆனால் இந்தியா மீது திணிக்கப்பட்ட இறக்குமதி வரிகள், மிகையான விசா கட்டணங்கள் ஆகியன குறைக்கப்படவில்லை.
அத்துடன் இந்தியா ரஷ்ய எரிபொருள் கொள்வனவை நிறுத்த உள்ளதாக மோதி கூறியதாக ரம்ப் கூறியிருந்தார். ஆனால் இந்தியா அதை மறுத்து இருந்தது. ரஷ்ய எரிபொருளை அதிகம் கொள்வனவு செய்வது சீனாவாக இருக்கையில் இந்தியாவை மட்டும் ரம்ப் தண்டிக்கிறார்.
இந்திய வெளியுறவு அமைச்சரும், அமெரிக்க வெளியுறவு செயலாளரும் மட்டுமே நேரடியாக ASEAN அமர்வின்போது சந்தித்து இருந்தனர்.
