ரம்ப் அணியை திகைக்க வைத்த Susie Wiles கூற்றுக்கள்

ரம்ப் அணியை திகைக்க வைத்த Susie Wiles கூற்றுக்கள்

அமெரிக்க சனாதிபதி ரம்பின் தற்போதைய chief of staff என்ற பிரதான அதிகாரி Susie Wiles அமெரிக்காவின் Vanity Fair என்ற செய்தி நிறுவனத்துக்கு கடந்த காலங்களில் வழங்கிய கூற்றுக்கள் இன்று செவ்வாய் வெளிவந்து அமெரிக்காவில் புதியதோர் கலகலப்பை ஏற்படுத்தி உள்ளன.

Suise Wiles தனது கூற்றுகளில் ரம்ப் குடிகாரன் போல் செயல்படுபவர், சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளில் பழிவாங்கும் குணம் கொண்டவர் என்றெல்லாம் கூறியுள்ளார். நியூ யார்க் Attorney General Letitia மீது ரம்ப் தரப்பு வழக்கு தொடர்ந்தது பழிவாங்கும் நோக்கிலேயே (that might be the one retribution) என்று கூறியுள்ளார் Wiles.

Venezuela விலும் ரம்ப் ஆட்சி கவிழ்ப்பு (regime change) ஒன்றை செய்ய முனைவதாக Wiles கூறியுள்ளார். ஆனால் ரம்ப் தான் அந்த முயற்சியில் இல்லை என்று கூறியிருந்தார். Venezuela மீதான தாக்குதலுக்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஆனால் ரம்ப் அதை செவிமடுக்கவில்லை என்றும் Wiles கூறியுள்ளார். Venezuela வை தாக்க ரம்புக்கு காங்கிரசின் அனுமதி தேவை என்றும் Wiles கூறியுள்ளார்.இந்த கூற்று ரம்புக்கு கொதிப்பை ஏற்றும்.

சர்வதேச கடலில் போதை வள்ளங்கள் மீது தாக்கப்படுவதையும் தான் எதிர்த்ததாகவும், ஆனால் ரம்ப் தாக்குதல்களை செய்ததாகவும் Wiles கூறியுள்ளார்.

ரம்ப் தன்னால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்ற மனநிலையிலேயே இயங்குவதாகவும் Wiles கூறியுள்ளார்.

ரம்ப் தரப்பு தற்போது Wiles கூற்றுகளை மூடி மறைக்க முனைகிறது. அத்துடன் Wiles தனது கூற்றுகளை Vanity Fair திரித்து (out of context) கூறுவதாக கூறுகிறார்.

Jeffrey Epstein னின் தீவுக்கு Bill Clinton னும் சென்றார் என்று ரம்ப் கூறியபோது ரம்பிடம் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை என்றும் Wiles கூறியுள்ளார்.

ரம்பை மட்டுமன்றி உதவி சனாதிபதி JD வான்ஸ் போன்றோரையும் Wiles தாக்கி கருத்து வெளியிட்டுள்ளார். முன்னர் ரம்பை கடுமையாக குற்றம் சாடிய வான்ஸ் பின்னர் ரம்புக்கு ஆதரவாக கதைக்க ஆரம்பித்தது அரசியலே (sort of political) என்றும் Wiles கூறியுள்ளார்.

தற்போதைய Attorney General Pam Bondi யையும் Wiles குறைவாக கூறியுள்ளார்.