அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆட்சியின் ஜனவரி முதல் மார்ச் 2025 வரையான முதலாம் காலாண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் (GDP) 0.5% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று இன்று வியாழன் அறிவிக்கப்படுள்ளது. முன்னர் 0.2% வீழ்ச்சி மட்டுமே எதிர்பார்க்கப்பட்டு இருந்தது.
கடந்த 3 ஆண்டுகளின் பின் இவ்வாறு அமெரிக்க GDP வீழ்ச்சி அடைந்துள்ளது.

2024ம் ஆண்டின் இறுதி காலாண்டில், பைடென் ஆட்சியில், அமெரிக்காவின் GDP 2.4% ஆல் வளர்ந்து இருந்தது.
ரம்பின் புதிய இறக்குமதி வரிகள் பல வழிகளில் அமெரிக்க GDP யை பாதித்து இருக்கலாம். மூலப்பொருள் இறக்குமதிகள் குறைந்ததால் அவற்றை பயன்படுத்தி செய்யப்படும் அமெரிக்க உற்பத்திகளும் குறைந்து இருக்கும். அதனால் GDP குறையும்.
மறுபுறம் இறக்குமதிகள், அவை வெளிநாடுகளில் செய்யப்படுவதால், GDP யை குறைக்கும். ரம்பின் இறக்குமதி வரியில் இருந்து தப்பிக்க பல நிறுவனங்கள் வழமைக்கு மாறாக அதிக அளவு இறக்குமதிகளை செய்தும் இருந்தனர்.
மக்கள் பணத்தை செலவழிக்கும் வேகமும் குறைந்து உள்ளது.
இந்த செய்திகள் ரம்புக்கு விருப்பத்துக்குரியன ஆக இருக்காது.