FIFA உதைபந்தாட்ட அமைப்பின் நிர்வாக உரிமையை அமெரிக்க சனாதிபதி ரம்பின் குடும்பத்துக்கு வழங்கும் திட்டம் நிறைவேறினால் UEFA என்ற ஐரோப்பிய உதைபந்தாட்ட அமைப்பு FIFA விளையாட்டுக்களை பகிஸ்கரிக்கும் வியாழன் எச்சரித்து உள்ளது.
மொத்தம் 55 உறுப்பினர் நாடுகளை கொண்ட UEFA பகிஸ்கரிப்பு தீர்மானத்தை வியாழன் வாக்கெடுப்பு மூலமே தெரிவு செய்துள்ளது.
உதைபந்தாட்ட போட்டிகளில் ஐரோப்பிய நாடுகள் பிரதான பங்கை கொண்டுள்ளன. ஐரோப்பிய நாடுகள் பங்கெடுக்காத FIFA போட்டிகள் பார்வையாளரை அதிகம் கவரா.
இந்த ஆண்டுக்கான FIFA கேடயத்தை வென்ற நாடான ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவையே semi-finals வரை முன்னேறிய 4 நாடுகளில் 3 நாடுகள். அத்துடன் quarter-finals வரை முன்னேறிய 8 நாடுகளில் 6 நாடுகள் ஐரோப்பிய நாடுகள்.
UEFA வின் அறிவிப்பின் பின் 41 நாடுகளை கொண்ட வட அமெரிக்க, மத்திய அமெரிக்க, கரிபியன் நாடுகளின் உதைபந்தாட்ட அமைப்பான CONCACAF உம் ரம்ப் குடும்ப திட்டத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. ஆனால் இது போட்டிகளை பகிஸ்கரிக்கும் என்று கூறவில்லை.
