ரம்ப் பேச்சு விடிஞ்சால் போச்சு, Jerome Powell பைடென் தெரிவாம்

ரம்ப் பேச்சு விடிஞ்சால் போச்சு, Jerome Powell பைடென் தெரிவாம்

அமெரிக்க சனாதிபதி ரம்பிடம் எண்ணற்ற குறைபாடுகள் உள்ளன. தனக்கு தெரிந்த ஒரே மொழியான ஆங்கிலத்தில் தரமாக பேச முடியாதது முதல் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது வரை அவரின் குறைபாடுகள் பல.

ரம்பின் இவ்வகை குடிகார பேச்சுக்கு மகுடமாக அமைகிறது அவர் Jerome Powell என்ற அமெரிக்க Chairman of the Federal Reserve (அமெரிக்க மத்திய வங்கி) முன்னாள் சனாதிபதி பைடெனால் பதவிக்கு அமர்த்தப்பட்டவர் என்றும், Powell மேற்படி பதவிக்கு தகுதி அற்றவர் என்றும் கூறுவது.

ரம்பின் விருப்பத்துக்கு ஏற்ப Powell அமெரிக்காவின் Federal Reserve வட்டியை குறைக்காத காரணத்தால் Powell மீது காழ்ப்பு கொண்டுள்ளார் ரம்ப்.

ரம்ப் அண்மையில் Powell “… is a terrible fed chair. I am surprised he was appointed.” என்றும் அவரை முன்னாள் சனாதிபதி “Biden put him in” என்றும் கூறியுள்ளார். அதாவது பைடென் மத்திய வங்கி தலைமை பதவிக்கு தகுதி அற்றவர் என்றும், அவரை முன்னாள் சனாதிபதி பைடெனே பதிவில் அமர்த்தினார் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் உண்மையில் Powell ஐ பதவியில் அமர்த்தியது ரம்பே. 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி தனது முதலாவது ஆட்சி காலத்தில் Powell ஐ ரம்ப் Federal Reserve Chairman பதவிக்கு அறிவித்து, 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி, ரம்பின் ஆட்சியில் Powell மத்திய வங்கியின் chairman பதவியை அடைந்திருந்தார்.

அது மட்டுமன்றி Powell லின் பதவி ஏற்பில் ரம்ப் Powell ஐ புகழ்ந்து இருந்தார். அன்று ரம்ப் “I am confident that Jay (Jerome) has the wisdom and leadership to guide our economy through any challenges our economy face…” என்று புகழ்ந்தும் இருந்தார்.

ரம்ப் தனது முதலாம் ஆட்சியில் பதவிக்கு அமர்த்திய Powell ஐ பின் ஆட்சிக்கு வந்த பைடென் தொடர்ந்தும் பதவியில் வைத்திருந்தார்.