ரம்ப் மீது மேலும் 37 வழக்குகள் பதிவு

ரம்ப் மீது மேலும் 37 வழக்குகள் பதிவு

முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் மீது மேலும் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெள்ளை மாளிகையில் இருந்து இரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக எடுத்து சென்றார் என்பதே இவர் மீதான குற்றச்சாட்டாகும்.

மொத்தம் 75 ஆவணங்கள் ரம்பின் மாளிகையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூரப்படுகிறது. அதில் 6 ஆவணங்கள் Top Secret என்றும் , 18 ஆவணங்கள் Secret என்றும், 3 ஆவணங்கள் Confidential என்றும் அடையாளம் இடப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்களில் சிலதை Five Eyes என்று அழைக்கப்படும் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அஸ்ரேலியா, நியூ சிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமே பார்வையிடும் உரிமையை கொண்டன.

வரும் செவ்வாய் மயாமி (Miami) நகரில் உள்ள நீதிமன்றில் தன் மீதான வழக்குகளுக்கு முகம் கொடுப்பார் என்று ரம்ப் தரப்பு கூறுகிறது.

ரம்ப் தன் மீதான வழக்குகளை witch hunt என்று விபரித்துள்ளார்.