ரம்ப் $50 மில்லியன் சேகரிப்பு, பைடென் $26 மில்லியன் 

ரம்ப் $50 மில்லியன் சேகரிப்பு, பைடென் $26 மில்லியன் 

ரம்ப் தனது சனாதிபதி தேர்தல் செலவுகளுக்கு சனிக்கிழமை செய்த நிதி திரட்டலில் $50.5 மில்லியன் சேகரித்துள்ளார். ஒபாமா, கிளின்டன் ஆகியோரையும் அழைத்து பைடென் செய்த நிதி சேகரிப்புக்கு  கிடைத்தது $26 மில்லியன் மட்டுமே.

கடந்த மாதம் ரம்ப் தரப்பு $65.6 மில்லியன் சேகரித்திருந்தது. அத்துடன் மாத முடிவில் ரம்ப் மொத்தம் $93.1 மில்லியன் சேகரித்திருந்தார்.

பைடென் கடந்த மாதம் $90 மில்லியன் சேகரித்து, மாத முடிவில் $192 மில்லியன் பணத்தை கொண்டிருந்தார்.

சனிக்கிழமை $814,600 நன்கொடை செய்தோர் ரம்ப் உணவு உண்ட மேசையிலேயே அமர்ந்து உண்ண உரிமை பெற்றனர். அவர்கள் ரம்புடன் நின்று புகைப்படம் எடுக்கும் உரிமையையும் கொண்டனர்.

ரம்ப் தான் சிறை சென்றால் அது தன்னை நெல்சன் மண்டேலாவுக்கு ஒப்பானவர் ஆக்கும் என்றும் கூறியிருந்தார்.