ரஷ்யாவிடம் அணு சக்தியில் இயங்கும் ஏவுகணை 

ரஷ்யாவிடம் அணு சக்தியில் இயங்கும் ஏவுகணை 

இன்று பல நாடுகளிடம் அணுக்குண்டு ஏவுகணைகள் உள்ளன. ஆனாலும் தலையில் இந்த அணுக்குண்டு கொண்ட ஏவுகணைகள் பழைய முறை எரிபொருளை பயன்படுத்தியே ஏவப்படும், பயணிக்கும் (அல்லது ஹிரோஷிமாவில் போடப்பட்டதுபோல் விமானத்தில் இருந்து போடப்படும்).

ஆனால் ரஷ்ய சனாதிபதி தாம் அணு சக்தியில் பயணிக்கும் ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக கூறியுள்ளார். அக்டோபர் 21ம் திகதி இந்த பரிசோதனை செய்யப்பட்டதாக ரஷ்ய ஜெனரல் Gerasimov கூறியுள்ளார். 

Burevestnik என்ற இந்த ஏவுகணை முதலில் திண்ம எரிபொருளை (solid fuel) பயன்படுத்தி ஏவப்படும். ஏவுகணை வானத்தை அடைந்த பின் இதன் பயணத்துக்கு அணு சக்தி பயன்படுத்தப்படும்.

இந்த ஏவுகணை நிலத்தில் இருந்து 50 மீட்டர் முதல் 100 மீட்டர் உயரத்தில் பயணிப்பதால் எதிரியின் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் இவற்றை வழிமறித்து அழிக்க முடியாது.

தற்போது இவ்வகை ஏவுகணை கொண்ட ஒரே நாடு ரஷ்யாவே.

2018ம் ஆண்டு இவ்வகை ஏவுகணை ஒன்றை தயாரிக்க ரஷ்யா முனைகிறது என்று அமெரிக்கா அறிந்திருந்தது.

அணு உலை தாராளமாக எரிபொருளை வழங்குவதால் இவ்வகை ஏவுகணை 20,000 km தூரம் வரை பயணித்து குறிகளை தாக்கும் வசதியை கொண்டிருக்கும்.