Shanghai Cooperation Organization (SCO) அமர்வுக்கு சீனா சென்ற ரஷ்ய சனாதிபதி பூட்டினும் சீன சனாதிபதி சீயும் மிகப்பெரிய எரிவாயு திட்டம் ஒன்றுக்கு இன்று செவ்வாய் இணங்கி உள்ளனர்.
இந்த இணக்கப்படி ரஷ்யாவின் Gazprom என்ற எரிவாயு நிறுவனம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 50 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவை சீனாவுக்கு விற்பனை செய்யும். இந்த எரிவாயு மங்கோலியா ஊடு Power of Siberia-2 குழாய் மூலம் எடுத்து செல்லப்படும்.
இத்தொகை இதுவரை ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்த எரிவாயு தொகையின் 50% ஆகும். அதனால் ரஷ்யா இந்த திட்டம் மூலம் திடமான சந்தை ஒன்றை பெற்றுள்ளது.
இந்த எரிவாயு திட்டத்தை நடைமுறை செய்ய ரஷ்யா நீண்ட காலமாக முயற்சி செய்து வந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் கொள்வனவு செய்த விலையிலும் குறைந்த விலைக்கே சீனா ரஷ்யாவின் எரிவாயுவை கொள்வனவு செய்கிறது. அதனால் இந்த திட்டம் சீனாவுக்கும் மிகவும் இலாபகரமானது.