ரஷ்ய கரோனா தடுப்பு மருந்தில் சிறிது நம்பிக்கை

ரஷ்ய கரோனா தடுப்பு மருந்தில் சிறிது நம்பிக்கை

ரஷ்யாவின் Sputnik-V என்ற கரோனா தடுப்பு மருந்து எதிர்பார்த்தபடி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிறது என்று ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் மேற்கு நாடுகள் சிறிது நம்பிக்கையையே கொண்டுள்ளார்.

மருந்தை பெருமளவு மக்களுக்கு வழங்கி பரிசோதனை செய்யாமை, நீண்ட காலம் பரிசோதனையை செய்யாமை ஆகியனவே மேற்கு நாடுகளின் நம்பிக்கை இன்மைக்கு காரணம்.

ரஷ்யாவின் தடுப்பு மருந்து ஜூன் மாதமும் ஜூலை மாதமும் இரண்டு 38 சுகதேகிகளை கொண்ட குழுக்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் 18 முதல் 60 வயது வரையானோர். மருந்தை பெற்ற அனைவரும் கணிசமான அளவில் கரோனா நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி உள்ளதாக ரஷ்யா கூறுகிறது.

அத்துடன் இந்த மருந்தை பயன்படுத்தியோர் தலையிடி, மூட்டு வலி போன்ற சில சிறு பக்கவிளைவுகளையே கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

ரஷ்ய மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை வரும் காலத்திலேயே நடைபெறும். இதற்கு பல நாடுகளில் இருந்து சுமார் 40,000 பயன்படுத்தப்படுவர்.

ரஷ்யா, சீனா தயாரிக்கும் மருந்துகள் விரைவில் வெளிவரின், அவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தயாரிக்கும் விலை உயர்ந்த மருந்துகளுக்கு போட்டியாக அமையும்.