லத்தீன் அமெரிக்காவுக்கு விமானம் தாங்கி அனுப்பும் ரம்ப் 

லத்தீன் அமெரிக்காவுக்கு விமானம் தாங்கி அனுப்பும் ரம்ப் 

லத்தீன் அமெரிக்கா நோக்கி அமெரிக்காவின் USS Gerald Ford என்ற விமானம் தாங்கி கப்பலை அனுப்புகிறார் அமெரிக்க சனாதிபதி ரம்ப். இந்த நகர்வை ரம்ப் வெள்ளி தெரிவித்துள்ளார். 

அண்மை காலங்களில் ரம்ப் வெனிசுஏலா, கொலம்பியா போன்ற சில லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் முரண்பட்டு வருகிறார். அதன் ஒரு அங்கமே இந்த விமானம் தங்கியின் பயணம்.

ஏற்கனவே அமெரிக்க படைகள் லத்தீன் அமெரிக்க பகுதியில் நிலை கொண்டு உள்ளன. இவர்களுடன் 8 யுத்த கப்பல்கள், 1 அணு சக்தி நீர்மூழ்கி, F-35 யுத்த விமானங்கள் ஆகியனவும் அங்கே நிலை கொண்டு உள்ளன. அமெரிக்காவின் CIA உளவு படையும் ஏற்கனவே இப்பகுதியில் இயங்கி வருகிறது.

போதை கடத்தும் வள்ளங்கள் என்று கூறி இதுவரை குறைந்தது 10 வள்ளங்களை அமெரிக்க படைகள் லத்தீன் அமெரிக்க கடல்களில் தாக்கி அழித்துள்ளன. இந்த தாக்குதல்களுக்கு சுமார் 40 பேர் பலியாகி உள்ளனர்.