வன்கூவர் கார் தாக்குதலுக்கு பலர் பலி, படுகாயம்

வன்கூவர் கார் தாக்குதலுக்கு பலர் பலி, படுகாயம்

கனடாவின் மேற்கு நகரான வன்கூவரில் (Vancouver) சனிக்கிழமை இரவு 8:00 மணியளவில் இடம்பெற்ற கார் தாக்குதல் ஒன்று பலர் பலியாகியும், வேறு பலர் காயமடைந்தும் உள்ளனர்.

இப்பகுதியில் வாழும் பிலிப்பீன் நாட்டவர் பங்கு கொண்ட Lapu Lapu Day களியாட்ட நிகழ்வு ஒன்றிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றது. இந்த விழாவுக்கு சுமார் 100,000 பேர் வந்திருந்ததாகவும், அவர் நிறைந்திருந்த வீதியில் வேகமாக சென்ற SUV வாகனம் ஒன்றே தாக்கியது என்றும் கூறப்படுகிறது.

East 41st Avenue வும், Fraser Street உம் சந்திக்கும் இடத்திலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலை செய்த அவ்விடத்தில் வசிக்கும் 30 வயதானவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் பெயர், தாக்குதலின் நோக்கம் ஆகியன அறிவிக்கப்படவில்லை.

இது ஒரு தனிநபர் தாக்குதல் என்றும், இதை ஒரு பயங்கரவாத செயல் ஆக கருதவில்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர். தாக்குதலை செய்தவர் ஏற்கனவே போலீசாருக்கு அறிமுகமானவர் என்றும் போலீஸ் கூறியுள்ளது.